
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி பெருமாள் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான குரு பிரசாத் என்பவruடன் இணைந்து சிங்காநல்லூர் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அதன் பிறகு கோவிலுக்கு அருகில் இருக்கும் குளத்தில் அமர்ந்து இருவரும் மது குடித்தனர். அதே சமயம் இருசக்கர வாகனத்தில் தனது காதலியுடன் வந்த விக்னேஷ் என்பவர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு காதலியுடன் நடந்து சென்றார். திரும்பி வந்து பார்க்கும்போது ஹெல்மெட் அங்கே இல்லை.
அப்போது மது குடித்துக் கொண்டிருந்த சதீஷ் மற்றும் குரு பிரசாத்திடம் ஹெல்மட்டை எடுத்தீர்களா என விக்னேஷ் கேட்டுள்ளார். அவர்கள் மரியாதையாக நாங்கள் ஹெல்மெட்டை எடுக்கவில்லை என கூறினர். ஆனால் விக்னேஷ் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் சதீஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஷை கைது செய்து அவரிடம் இருந்த கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.