
தமிழகம் முழுவதும் பிரபல திருமலா பால் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளது. அதன்படி நிறைகொழுப்பு பால் லிட்டருக்கு 70 ரூபாயிலிருந்து 72 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நிலைப்படுத்தப்பட்ட பால் விலை 60 ரூபாயிலிருந்து 62 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு கிலோ தயிர் விலை 67 ரூபாயிலிருந்து 72 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.