
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.
விமான சேவை துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி கூடுதல் பயணிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதான் திட்டத்தின் கீழ் சிறிய விமான நிலையங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு ஆதரவு வழங்கப்படும். இதனையடுத்து பீஹார் மாநிலத்திற்கான மூன்றாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
இதனை தொடர்ந்து கப்பல் கட்டுமானத்துக்கு ரூ.25,000 கோடி மதிப்பிலான கடல்சார் மேம்பாட்டு பண்ட் அமைக்கபட்டு, 49% அரசு பங்களிப்பும், மீதமுள்ள தொகை துறைமுகங்கள் மற்றும் தனியார் துறையினரால் திரட்டப்படும் என கூறியுள்ளார்.