தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்ட ஓராண்டு நிறைவடைந்துள்ளதை குறிப்பிட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டதா? ஓ invisible ஆக இருந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றால் visible ஆக வந்து எவ்வளவு காலம் ஆகப்போகிறது என தெரியவில்லை. தமிழ் சினிமா திரையில் அவர் விசிபிள் ஆக இருக்கின்றார்.

அவருடைய ரசிகர்கள் கோபப்படக்கூடாது. விஜய் களத்திற்கு இறங்கி வந்து மக்களுக்காக பணி செய்தால் அது மகிழ்ச்சி தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உள்ளது. அதனைப் போலத்தான் விஜய்க்கு தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும். Work from home மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும், களத்தில் இறங்க வேண்டாம் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. எங்களைப் போன்ற தலைவர்கள் மக்களோடு மக்களாக பழகுகின்ற தலைவர்கள் தான் சரியான தலைவர்கள் என்று நாங்கள் கருதுகிறோம். அதனை விஜய் முடிவு செய்து கொள்ளட்டும் என்று பேசி உள்ளார்.