
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஸ்டாலின் விடியா அரசு இனியும் தூங்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத ரீதியான மோதல் வரக்கூடாது. ஒரு பிரச்சனை வரும்போது அந்த பிரச்சனையை உடனடியாக அமர்ந்து பேசி தீர்த்து விடுவோம் என்று முடிவே கிடையாது. கொழுந்துவிட்டு தீ எரிகின்ற ஒரு சூழ்நிலை. அந்த மாவட்ட நிர்வாகம் அமைதியாக இருக்கு. மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். மதரீதியாக மோதுவதற்கு இந்த அரசு விரும்புகிறதா?
இது விடியா அரசாங்கத்தின் பொறுப்பு .எனவே இதற்கு பதில் சொல்ல வேண்டியது ஸ்டாலின் அரசாங்கம். ஸ்டாலின் அரசு தூங்கிக் கொண்டிருக்காமல் உடனடியாக விழிப்போடு இருந்து அங்கு சுமுகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி ஒரு மோதல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கடமை. இந்த பொறுப்பு விடியா அரசாங்கத்திற்கு உண்டு” என்று பேசியுள்ளார்.