ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் (60). இவர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வந்த நிலையில் கோவையில் பயணம் மேற்கொண்டு இருந்தார். இவர் நேற்று வால்பாறை அருகே டைகர் பள்ளதாக்கு காட்சி முனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காட்டு யானை அவருடைய இருசக்கர வாகனத்தை வழிமறித்து கடுமையான முறையில் தாக்கியது.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.