
இலங்கை வீரர் டிமுத் கருணாரத்னே (36). இவர் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான நிலையில் வருகிற 6-ம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
இவர் இதுவரையில் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதன் மூலம் 7172 ரன்களும், 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1316 ரன்களும் எடுத்துள்ளார். இவர் இதுவரை 16 சதம் மற்றும் 39 அரை சதங்களை அடித்திருக்கிறார். மேலும் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த இலங்கையின் 3-வது கேப்டன் என்ற பெருமையையும் பெறுவார்.