
மதுரை மாநகராட்சி அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார். இவர் சமீபத்தில் மதுரையில் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்திருந்தார். அதாவது மேலிடத்தின் அழுத்தம் காரணமாக உறுப்பினர் கார்டில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் போலியான உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் அதிமுகவில் நடைபெறுவதாகவும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி உதயகுமாரை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
