நெல்லூர் மாடு என்பது இந்தியாவில் இறைச்சி தேவைக்காக ஆந்திர மற்றும் தெலுங்கானா பகுதிகளில் கொண்டுவரப்பட்ட நாட்டு வகையாகும். ஓங்கோல் மாடுகளில் இருந்து பிரேசிலில் உருவாக்கப்பட்ட ஒரு மாட்டு இனமாகும். இந்த வகை மிகவும் குளிர்ந்த வெப்பநிலையை தவிர அனைத்து வெப்பநிலையையும் தாங்கும் விதத்தில் உள்ளது. அதிக வெப்ப தாங்கும் திறன், நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் பல்வேறு ஒட்டுண்ணிகளிடமிருந்து காத்துக் கொள்ளும் ஆற்றல் போன்றவை பெற்றுள்ளன. இந்த வகையான மாடுகள் பிரேசிலில் பெரும் அளவு வளர்க்கப்படுகின்றன.

இந்த நெல்லூர் மாட்டு இன பசுவான “வியாடினா 19” என்ற பசு பிரேசிலின் மினாஸ் ஜெரைசில் கால்நடை கண்காட்சியில்  கலந்து கொண்டது. இதில் இந்த இந்திய வகை பசு 40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் மிகவும் விலை உயர்ந்த ஏலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. “வியாடினா 19” என்ற பெயரிடப்பட்ட இந்த பசு உடல் அழகுக்காகவும், இதன் அசாதாரண மரபணுக்களின் காரணமாகவும் தென் அமெரிக்கா அழகு பட்டத்தையும் வென்றுள்ளது. இந்த வகையான மாடு மற்ற மாடுகளை விட இரண்டு மடங்கு எடை கொண்டது.