
டெல்லியில் 70 தொகுதிகள் இருக்கும் நிலையில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வந்த நிலையில் பாஜக வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் 27 வருடங்களுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் அதனை பாஜகவினரும் பாஜக கட்சியின் தலைவர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது தொடர்பாக தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் தலைநகரில் பாரதிய ஜனதா கட்சி தலைநிமிர்கிறது. ஆம் ஆத்மி தலைகுனிகிறது. காங்கிரஸ் நிலை குலைகிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.