
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இந்த மாணவி நேற்று ஈரோட்டுக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து ரயிலில் சென்ற நிலையில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறினார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் ரயில்வே போலீஸ் திண்டுக்கல் நிறுத்தத்தில் வந்து ஏறினர்.
அந்த மாணவி கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் வாலிபரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பது தெரியவந்தது. இந்த வாலிபர் கூலி வேலை செய்து வருகிறார். சமீபத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளி விட்டதில் அந்த பெண்ணின் கரு கலைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது ஓடும் ரயிலில் மீண்டும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.