நாம் தமிழர் கட்சி ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் துடைத்து எறியப்படும் என்று குடந்தை அரசன் பேசியுள்ளார்.

விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாக தலைவர் குடந்தை அரசன் பேசுகையில் , நாம் தமிழர் கட்சி ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் துடைத்து எறியப்படும். நீங்கள் சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் பாஜக துணையோடு இருக்கிறீர்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. நாங்கள் தற்போது உங்களை அரசியல் ரீதியில் தேர்தல் களத்தில் வெற்றி கண்டுள்ளோம்.

வேறு எந்த களம் என்றாலும் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என்று சவால் விடுத்து பேசி உள்ளார். மேலும் பெரியாரை அவமதிக்கும் நோக்கத்திலும், இழிவுபடுத்தும் நோக்கத்திலும் அவர் குறித்த கட்டுக்கதைகளை சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சியை பெரியார் மன்னனான ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியுற செய்ய வேண்டும் என்பதற்காக அங்கு விடுதலை தமிழ் புலிகள் கட்சி வேட்பாளர் வெண்ணிலா, பெரியார் பெருந்தொண்டர்கள் தமிழ் தேசியம் ஆதரவோடு போட்டிட்டார்கள்.

அமைச்சர் ஆக வேண்டும், எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்றோ, முதலமைச்சராக வேண்டும் என்றோ உள்ளிட்ட எந்த நோக்கமும் எங்களுக்கு கிடையாது. இந்த இடைத்தேர்தலில் சீமானின் கட்சியை டெபாசிட் இழக்க செய்ததன் மூலமாக நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம்” என்று பேசியுள்ளார்.