நாமக்கல் மாவட்டத்தில் விஜயகுமார் (39) என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 8 வயதில் ஒரு மகன் மற்றும் 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜயகுமாரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அண்ணன் என்ற முறையில் பழகி வந்தார். இந்த கல்லூரி மாணவியை விஜயகுமார் தினசரி பைக்கில் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய தாயாருடன் ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்ற கல்லூரி மாணவி திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோன்று வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் விஜயகுமாரை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தலைமறைமாக இருந்த விஜயகுமார் மற்றும் மாணவியை தற்போது கண்டுபிடித்தனர். தற்போது மாணவி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அதாவது  பல ஆசை வார்த்தைகளை கூறி விஜயகுமார்  மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து தங்களுடைய மகளுக்கு நீதி வேண்டும் என கூறி அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.