சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் மேட்டு தெருவில் ஹமீதுல்லா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஹமீதுல்லா தனது நண்பரான அக்பர் அலி என்பவருடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அக்பர் அலியின் தாய் குறித்து ஹமீதுல்லா தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அக்பர் அலி ஹமீதுல்லாவை புளியந்தோப்புக்கு அழைத்துச் சென்று பிரியாணி வாங்கி கொடுத்து மீண்டும் மது குடிக்க வைத்தார்.

அதன் பிறகு கோபத்தில் ஹமீதுல்லாவை ஆடு வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹமீதுல்லாவை வீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அக்பர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.