
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு காவிரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த 25 வயது நபருடன் திருமணம் நடந்துள்ளது. அதன்படி குந்தாரப்பள்ளி அருகே உள்ள ஒரு முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்ற நிலையில் மாணவியின் பெற்றோரும் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் தங்களுடைய வீட்டில் ஒரு விசேஷம் இருப்பதால் ஆடைகள் வாங்க செல்ல வேண்டும் என மாணவி கூறிய நிலையில் ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் அவருடைய கழுத்தில் மஞ்சள் நிறத்தில் தாலி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் மாணவியின் பெற்றோர் அவரை திருமணம் செய்து கொண்ட வாலிபர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.