தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வெல்வோம் 200 படைப்போம் வரலாறு, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200 இலக்கு, அதன் தொடக்கம் தான் ஈரோடு கிழக்கு என்று முழக்கமிட்டு வரும் முதலமைச்சர் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்தின் மூலமாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு பலன் சென்றடைந்து கொண்டிருக்கிறது. கடந்த முறை செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அதிமுகவில் இருப்பவர்கள் பேசிக்கொள்வதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் என்று நான் கூறியிருந்தேன்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் முதல் முறையாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர் என்பதையும் கூறினேன். தமிழ்நாட்டை ஆளக்கூடிய பொறுப்பை முதலமைச்சரிடம் மக்கள் தருவார்கள். திமுகவுக்கு எதிரிகளே இல்லை என ஒருபோதும் சொல்வதில்லை. 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு அதிமுக தான் ஒரே எதிரி. செங்கோட்டையன் திமுகவில் இணைகிறார் என்ற கேள்விக்கு பதில் இல்லை. அப்படி அவரும் சொல்லவில்லை. ஆனால் செங்கோட்டையன் அதிருப்தியில் அவருடைய மனக் குமுறலை சொல்லி இருக்கிறார். நான் திமுகவில் இணைய போகிறார் என்று சொல்லவில்லை என ரகுபதி பேசியுள்ளார்.