
கடலூர் மாவட்டத்தில் உள்ள கட்டியங்குப்பம் மெயின் ரோடு பகுதியில் கோபால கண்ணன்(50)-விஜயா(48) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கோபால கண்ணன் கோயம்புத்தூரில் இருக்கும் கல்லூரியில் தங்கி சமையல் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை நாளில் மட்டும் சொந்த ஊருக்கு வருவார். இந்த நிலையில் விஜயாவுக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் தேவநாதன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதளாக மாறியது. தேவநாதனுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் தனது மனைவியின் தகாத உறவு பற்றி அறிந்த கோபால கண்ணன் வேலைக்கு செல்லாமல் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை வாயில் நுரை தள்ளியபடி கோபால கண்ணன் வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கோபால கண்ணனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கோபாலகிருஷ்ணனை கொலை செய்ய விஜயாவும் தேவநாதனும் சேர்ந்து திட்டம் தீட்டினர். அதன்படி விஜயா மீன் குழம்பில் பூச்சி மருந்தை கலந்து கோபால கண்ணனுக்கு கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டு வாயில் நுரை தள்ளிய படி கோபால கண்ணன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் விஜயாவையும், தேவ நாதனையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.