முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தினை செயல்படுத்துவதில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை செயல்படுத்துவதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்று தேங்காய் விவசாயிகளுக்கு விரைவாக பணப்பட்டுவாடா செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.