பிக் பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவர் தான் நடிகை அர்ச்சனா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக விஜய் டிவியில் வில்லி கதாபாத்திரத்தில் ஒரு தொடரில் நடித்து வந்தார்.  இவர் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத் என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்தார். இதற்கிடையில் அருண் பிரசாத்தும் கடந்த பிக்பாஸ்  சீசன்-8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தான் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்தார்கள். இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி அருண் மற்றும் அர்ச்சனா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். தற்போது இதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை பொழிந்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sathya Sekar (@jiyamakeupartistry)