திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மருதகுளம் பகுதியை சேர்ந்த பிரைட் ஜூவட்ஸ் என்பவர் தற்காலிக பேராசிரியராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் பிரைட் ஜூவட்ஸ் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை இரவு நேரத்தில் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரைட் ஜூவட்சை கைது செய்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதே கல்லூரியில் இரண்டு பேராசிரியர்கள் ஒரு மாணவியை மது அருந்த அழைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதே கல்லூரியில் மற்றொரு பேராசிரியர் பாலியல் வழக்கில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.