நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடக்க இருக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் முன்னதாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் யார்? யார்? என்பது குறித்து பார்க்கலாம். நான்கு பேர் அதிகபட்சமாக மூன்று சதங்கள் அடித்துள்ளார்கள். அதாவது,” இந்தியாவின் ஷிகர் தவான் பத்து போட்டியில் மூன்று சதங்கள், மூன்று அரை சதங்களும், முன்னாள் கேப்டன் கங்குலி 13 போட்டிகளில் மூன்று சதங்கள், மூன்று அரை சதங்களும் விளாசி உள்ளார் . தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கிப்ஸ் 10 போட்டிகளில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கெய்ல் 17 போட்டிகளில் என இரண்டு பேரும் தலா மூன்று சதங்களை விளாசியுள்ளார்கள்.