திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராம் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன் அறிமுகமானார். இந்த மாணவன் ஒரு அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக சிறுமியிடம் பழகி காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அதன் பிறகு அந்த மாணவியை அந்த மாணவன் அடிக்கடி நேரில் சந்தித்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்து அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில்அந்த மாணவி கடந்த சில நாட்களாகவே மிகவும் உடல் சோர்ந்து காணப்பட்டதால் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இது குறித்து வந்தவாசி மகளிர் காவல் நிலையத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் கொடுத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாணவனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.