
தமிழகத்தில் வீடு, நிலம் வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்வதற்கு நல்ல நாட்களை பார்த்து பத்திரப்பதிவு செய்பவர். இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டண ரூபாய் 1000 சேர்த்து வசூலிக்கப்படும் எனவும், இன்று பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மாற்றி விடுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து நாளையும் முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கூடுதல் டோக்கன்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்க பத்திரப்பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.