தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த வருடம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அக்காட்சி விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 51 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஆர்.கே நகரில் தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு 51 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி. தவெக பொதுச்செயலாளர் N.ஆனந்த் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு ஒரு கிராம் வெள்ளி நாணயம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.