
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்று அடுத்தடுத்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, பாயும் புலி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான 2K லவ் ஸ்டோரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படியான நிலையில் சுசீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமாவில் வருவதற்கு முன்பு நிறைய திருமண மண்டபங்களுக்கு சென்று சப்ளையர் வேலை பார்த்து உள்ளேன். அங்கு 25 ரூபாய் தான் சம்பளம் தருவாங்க. மாதத்திற்கு மொத்தமா 600 ரூபாய் சம்பளம் வரும். அதில் 300 ரூபாய் வாடகை கட்டி விட்டு மீதம் இருக்கக்கூடிய 300 ரூபாய் பணத்தில்தான் அந்த மாதம் முழுவதும் ஓட்ட வேண்டும். சுமார் மூன்று வருடம் அப்படிதான் சிரமப்பட்டேன். அதன் பிறகு தான் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து பல்வேறு சிரமங்களை சந்தித்து இன்று இந்த இடத்தில் இருக்கிறேன் என்று சுசீந்திரன் மன வருத்தத்துடன் பேசி உள்ளார்.