கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பிருந்தாவன் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திரன் தான் புதிதாக கட்டும் வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக சிப்காட் பகுதியில் இருக்கும் மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது மின்சார வாரிய உதவி பொறியாளர் சிவகுரு, ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.

முதலில் ராஜேந்திரன் 5000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அதன்பிறகு ராஜேந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் பணத்தை ராஜேந்திரன் சிவகுரு மற்றும் பிரபாகரன் ஆகியோருடன் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.