சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர்தான் பாவனி. இவர் சின்னத்தம்பி தொடர் மூலமாக பிரபலமானார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நடன கலைஞர் அமீருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது.  பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே பாவனியை அமீர் ஒரு  தலைப்பட்சமாக காதலித்து வந்தார். ஆனால் வீட்டிற்குள் அமீரின் காதலை ஏற்காத பாவனி  வெளியே வந்தவுடன் ஏற்றுக் கொண்டார். இவர்களுடைய நட்பு காதலாக மாறியது.

பின்னர் மூன்று வருடங்களாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் தற்போது லிவிங்க் டுகெதரில் இருந்து வருகிறார்கள். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வரும் இந்த ஜோடி காதலர் தினத்தை அன்று தங்களுடைய திருமண தேதியை அறிவித்தார்கள். அதன்படி வரும் ஏப்ரல் இருபதாம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்கள் . இதனையடுத்து இவர்களுக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.