வேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று நிறைய பேருக்கு தூக்கம் வராது. காரணம் ஜார்ஜ் கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு விரட்டும் கூட்டம் வேலூர் கோட்டையிலிருந்து புறப்பட்டு விட்டது. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கட்டாயம் ஆட்சி அமைக்கும். தீய சக்தி திமுகவை விரட்ட வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார்.

இளைஞர்களை தான் எம்ஜிஆர் நம்பினார். அவருடைய பின்னால் இளைஞர்கள் நம்பி சென்றனர். இளைஞர் அணிகளை எம்ஜிஆர் உருவாக்கினார். பிறகு 2008 ஆம் ஆண்டு ஜெயலலிதா இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையை தொடங்கியதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். இதன் மூலம் அதிமுக மேலும் வலுப்பெற்றது. தமிழகத்திலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள இயக்கம் அதிமுக தான். எனவே இளைஞர்கள் சிப்பாய்களை வைத்து தேர்தல் பணியை செய்வோம் இன்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.