கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி அன்று விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதாவது, தன்னுடைய மனைவியை கடத்தியவர்களை அஜித் எப்படி கண்டுபிடித்து இருக்கிறார் என்பது தான் கதை. அந்த கடத்தல் கும்பலில் ஒருவராக ஆரவ் நடித்திருந்தார். படத்தில் அவர் அஜித்தை மோசமாக பேசும் விதமாகவும் வசனங்கள் இருந்தது. குறிப்பாக பூமர் என்று அஜித்தை  அவர் சொன்னது வைரலானது.  இந்த நிலையில்சேலத்தில் விடாமுயற்சி படம் ஓடும் தியேட்டர் ஒன்றுக்கு ஆரவ் மற்றும் ரெஜினா இருவரும் சென்றிருந்தார்கள்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள்,” படத்தில் அஜித்தை அடித்து நடித்திருக்கிறீர்கள். அதற்கு ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது? என்று கேள்வி கேட்டதற்கு,  பதிலளித்த ஆரவ், “கதை எப்படி இருந்தால் என்ன?  என்னுடைய ரசிகர்களுக்கு எது படம்? எது ரியல்? என்று புரிந்து கொள்ள முடியும் என்றும் சொன்னார். முதல் நாள் நான் 10, 12 தியேட்டர்களுக்கு சென்று அஜித் ரசிகர்கள் உடன்தான் படம் பார்த்தேன். அப்போது எல்லோரும் என்னை பாராட்டத்தான் செய்தார்கள்” என்று கூறியுள்ளார்.