ஏஞ்சல் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்காத வழக்கில் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. படபிடிப்பை முடித்துக் கொடுக்காததால் 25 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஏஞ்சல் படத்தை முடித்துக் கொடுக்காமல் மாமன்னன் தனது கடைசி படம் என உதயநிதி அறிவித்தார். படத்தை முடித்துக் கொடுக்காததால் இழப்பீடு கோர முழு அதிகாரம் உள்ளது என மனுதாரர் நீதிமன்றத்தில் வாதிட்டார். இந்த வழக்கு விசாரணையை நீதிபதி மார்ச் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.