
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் சத்தியமூர்த்தி (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு 13 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்த சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆசை வார்த்தைகளை கூறி சத்தியமூர்த்தி நேரில் பார்க்க வருமாறு அழைத்துள்ளார். அதை நம்பி சிறுமியும் சென்ற நிலையில் சத்தியமூர்த்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் குறித்து வெளியே சொல்ல கூடாது என அவர் சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதனால் சிறுமி பயத்தில் அந்த விஷயம் குறித்து யாரிடமும் வெளியே சொல்லாத நிலையில் திடீரென சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் சிறுமியிடம் விசாரித்ததில் நடந்த விபரங்கள் குறித்து அவர் கூற இது தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.