
குழந்தைச் செல்வங்கள் ‘அப்பா’ என்று அழைத்ததை, வன்மத்துடன் கொச்சைப்படுத்தி பேசியதை ஒருபோதும் ஏற்க முடியாது. முதலமைச்சரை அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
வயதில் மூத்தவர்களை ‘அப்பா’ என்று அழைப்பது தமிழ்நாட்டில் காலங்காலமாக இருக்கும் வழக்கத்தில் ஒன்றுதான் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.