மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்று விட்டு சிலர் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அவர்கள் ஒரு மினி சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு டிப்பர் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இவர்கள் மணமகனுக்கு நெருங்கிய உறவினர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் திருமண வீடு களை இழந்து விட்டது.