
இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் பெரும்பாலான பெண்கள் இந்திய ஆண்களையே விரும்புகின்றனர். பங்களாதேஷ் பெண்கள் இந்திய ஆண்களை திருமணம் செய்ய ஏன் விரும்புகிறார்கள்? இந்த காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால் நிபுணர்கள் சிலர் கூறியதாவது, இந்திய குடியுரிமை பெறுவது முக்கிய காரணமாக இருக்கலாம். ஒருவர் இந்திய குடியுரிமை பெற 7 ஆண்டுகள் இந்திய குடிமகனை திருமணம் செய்து வாழ வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் குடியேறுவது எளிதாகும் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டு அதிகமான பங்களாதேஷ் பெண்கள் இந்திய ஆண்களை திருமணம் செய்ய விண்ணப்பித்துள்ளனர். அதாவது டிசம்பர் 2024 வரையிலான கணக்குகளின் படி, 100 பங்களாதேஷ் பெண்கள் இந்திய ஆண்களை திருமணம் செய்ய சட்டப்பூர்வ அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது 2023 ஆம் ஆண்டை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 11 பங்களாதேஷ் ஆண்கள் இந்திய பெண்களை திருமணம் செய்ய விண்ணப்பித்துள்ளனர். வரலாற்று பாரம்பரிய படி பங்களாதேஷ் பெண்கள் இந்திய ஆண்களை திருமணம் செய்யும் எண்ணிக்கை எப்பொழுதுமே அதிகமாக இருந்து வந்துள்ளது.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இது அதிகரித்து வருகிறது. பங்களாதேஷில் மட்டும் 410 பெண்கள் இந்திய ஆண்களை திருமணம் செய்துள்ளனர். இதேபோன்று 76 பங்களாதேஷ் ஆண்கள் இந்திய பெண்களை திருமணம் செய்து பங்களாதேஷில் வாழ்ந்து வருகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ஆண்களும், பங்களாதேஷ் பெண்களை திருமணம் செய்ய ஆர்வம் காட்டுவதால் இரு நாடுகளுக்கிடையான திருமண உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.