கேரள மாநிலம் பத்தினம்திட்டம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ராதாகிருஷ்ணன் குரூப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவருடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபருக்கும் அடிக்கடி ஒரு சேவலால் தகராறு வந்துள்ளது. அதாவது வீட்டு மொட்டை மடியில் நின்று அதிகாலை 3 மணிக்கு அந்த சேவல் கூவுவதால் தன்னுடைய தூக்கமே கெட்டுப் போய்விட்டதாக அடிக்கடி அந்த பக்கத்து வீட்டுக்காரருடன் ராதாகிருஷ்ணன் தகராறு செய்துள்ளார். அதாவது வயது மூப்பு காரணமாக இரவில் தூக்கம் இல்லாமல் தவிக்கும் ராதாகிருஷ்ணன் அதிகாலையில் தூங்குவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் சேவல் கூவுவதால் அவருக்கு தூக்கமே கெட்டுப் போய்விட்டது.

இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமார் மீது ராதாகிருஷ்ணன் புகார் கொடுக்க அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அனில் குமார் வீட்டின் மொட்டைமாடியில் கூண்டு வைத்து சேவலை வளர்த்து வரும் நிலையில் அது கத்துவது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவாக இருப்பது தெரிய வந்தது. மேலும் இதன் காரணமாக அந்த சேவல் கூண்டை வேறொரு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகள் அணில் குமாருக்கு உத்தரவிட்டனர். இதற்காக 14 நாட்கள் கால அவகாசமும் கொடுத்துள்ளனர்.