
ராமநாதபுரம் மாவட்டம் குமிழேந்தல் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய பகவதி மங்கலம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபனை(29) சந்தித்துள்ளார். அப்போது விஏஓ ரூ. 37,000 கேட்டு, ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தனியார் இ-சேவை மையத்தில் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பின் காவல்துறையினரின் அறிவுரைப்படி கடந்த 7ஆம் தேதி அன்று இ-சேவை மையத்தில் அதன் உரிமையாளரான அகமது ஜப்பிரின் அலியிடம் 37 ஆயிரம் லஞ்சப் பணத்தை விவசாயி கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் அவரை கைது செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விஏஓ தலைமறைவானார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் விஏஓ பார்த்திபனை பணியிடம் நீக்கம் செய்து, இராமநாதபுரம் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் நேற்று உத்தரவிட்டார்.