அறிமுக இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன் படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜோமோல் மற்றும் ஹரி கிருஷ்ணனுடன் லாஸ்லியா நடித்துள்ளார். இந்த படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டார்கள் .அந்த வகையில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜமுருகன் பேசுகையில், “பெண்களை கடவுளாக பார்க்கும் சமூகம் மிகவும் ஆபத்தான சமூகம் என்று நான் நினைக்கிறேன். எதற்காக பெண்களை கடவுளாக பார்க்கிறார்கள் பெண்களை மனுசியாக பாருங்கள். பெண்களை மனுசியாக பார்த்து அவர்கள் மொழியில் உரையாடுவது மிகவும் முக்கியமான ஒன்று. அதை இந்த படம் செய்திருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.