
சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை மிகவும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 64,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்பிறகு ஒரு கிராம் 8070 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 8803 ரூபாயாகவும், ஒரு சவரன் 70 ஆயிரத்து 424 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 109 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.