தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவுக்கு இடையே மோதல் போக்கு என்பது நிலவுகிறது. இந்த நிலையில் திமுக ஐடி விங் கெட் அவுட் மோடி என்ற ஹேஷ்டேக்கை இணையதளத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள். இதற்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நாளை காலை 6 மணி வரை தான் டைம் எனவும் நான் நாளை என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் என்று பதிவிடுவேன் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு அண்ணா சாலைக்கு நான் வருகிறேன் என்றும் முடிந்தால் திமுகவின் மொத்த படையையும் இறக்குங்கள் என்றும் அண்ணாமலை கூறி இருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலைக்கு துணிவிருந்தால் வர சொல்லுங்கள் என்று எதிர்வினை ஆற்றினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாசாலை நான்  எந்த இடத்திற்கு வர வேண்டும் என்று திமுகவினரே நாள் மற்றும் தேதியை குறித்துக் கொடுங்கள். அன்றைய தினம் நான் தனியாகவே வருகிறேன் என்று அண்ணாமலை தற்போது கூறியுள்ளார். இதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலினை அண்ணாமலை ஒருமையில் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த நிலையில் அண்ணாசாலைக்கு தனியாக வருகிறேன் எனவும் முடிந்தால் திமுகவினரை வைத்து தடுத்து பாருங்கள் எனவும் அண்ணாமலை சவால் விடும் விதமாக பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.