பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம், கொலை கொள்ளை என்று மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி கொண்டு இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் திமுக அரசின் மீதான மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப கெட் அவுட் மோடி என்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

திராவிட மாடல் தலைவர்கள் முதல் புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் வரை தமிழகத்திற்கான மாற்றம் அல்ல. ஏமாற்றம் என்பதே நிதர்சனமான உண்மை. தமிழகத்தின் அரசியல் குப்பைகளாக செயல்படும் இந்த கட்சிகளை தமிழக மக்கள் தங்களுடைய மனதில் இருந்து அப்புறப்படுத்தி விட்டனர். மக்கள் இவர்களுக்கு வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும். கலைக்கப்பட வேண்டிய திமுக ஆட்சியை பெருந்தன்மையுடன் மோடி அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. திமுகவினரே திருந்துங்கள் இல்லை என்றால் திருத்தப்படுவீர்கள், கட்டாய ஆட்சி மாற்றத்திற்கு நீங்களே வழியை உருவாக்க வேண்டாம் என்று பேசியுள்ளார்.