இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயன் தரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அந்த திட்டங்கள் மூலம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இப்படியான நிலையில் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயன்பெறும் விதமாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் தான் பி எம் இன்டெர்ன்ஷிப். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தின் மூலமாக படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பயிற்சி வழங்கப்படுகின்றது.

இதற்கு 12 மாதங்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரே ஒரு மாதம் மட்டும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை மீண்டும் 2025 பிப்ரவரி 20ஆம் தேதி அரசு தொடங்கியுள்ள நிலையில் அதன் முன்னோடி கட்டத்தில் இரண்டாவது சுற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவில் 730 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://pminternship.mca.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பிரதமர் பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.