
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மங்களேஸ்வர் மற்றும் ரஞ்சிதா தம்பதியினர். இவர்கள் கேரளாவில் உள்ள ஒரு மீன் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ரஞ்சிதா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அவருடைய கணவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தன் மனைவியை அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு இருந்ததால் வேறொரு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்தது. இதில் மங்களேஸ்வர் தன் மனைவி மற்றும் குழந்தையை கவனித்த நிலையில் ரஞ்சிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் குழந்தை தொடர்ந்து சிகிச்சையில் இருந்தது.
இந்த நிலையில் குழந்தையை பராமரிக்க கையில் பணம் இல்லாத காரணமா அல்லது பெண் குழந்தை என்பதாலோ பெற்றோர் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் குழந்தைக்கு இன்னும் ஒரு மாத காலம் தீவிர சிகிச்சை தேவைப்படுவதால் மருத்துவர்கள் கண்காணிப்பில் குழந்தை இருக்கும் நிலையில் குழந்தை குணமடைந்த பிறகு பெற்றோரை தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளனர்.