தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் மத்தியிலாலும் பாஜக அரசு இடையே சமீப காலமாக ஏற்பட்டுள்ள கருத்து மோதல் தமிழக அரசியல் ரீதியான மோதலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவரும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அண்ணாமலை உதயநிதியை விமர்சிப்பதும் பதிலுக்கு உதயநிதி அண்ணாமலைக்கு சவால் விடுவதும் என மாறி மாறி தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.  அதுமட்டுமல்லாமல் திமுக கெட் அவுட் மோடி என்று ட்வீட் போட, மறுபக்கம் அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்வீட் போட்டுக் கொண்டிருக்கின்றார்.

இப்படியான நிலையில் அண்ணாமலைக்கு செல்வப் பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப் பெருந்தகை, இருமொழிக் கொள்கை ஜவர்கலால் நேரு காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. இருமொழி கொள்கை தமிழகத்தில் தொடரும் மூன்றாவது மொழி திணிக்கப்படாது என்று அப்போதே வாக்குறுதி வழங்கப்பட்டது. எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி ஆட்சியில் இருந்தபோது இரு மொழிக் கொள்கை தொடரும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். மூன்றாவது மொழியை திணிக்க வேண்டாம். எங்களுடைய பிள்ளைகளுக்கு எது விருப்பமோ அதை அவர்கள் படிப்பார்கள்.

மூன்றாவது மொழியை திணிக்க நீங்கள் யார்? இதை தான் எதிர்க்கிறோம், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் இதை தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். கோ பேக் ஸ்டாலின் என்று சொல்வதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கு. அவரை தான் மக்கள் அனைவரும் கெட் அவுட் செய்யப் போகிறார்கள். தமிழகத்தை சீரமைத்து அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாற்றியுள்ள முதல்வர் ஸ்டாலினை கெட் அவுட் என்று சொல்லினால் மக்கள் இவரை சும்மா விட்டுடுவாங்களா. இப்படி செய்தால் வருகின்ற தேர்தலில் அண்ணாமலை டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.