
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது வீட்டில் இருந்து காரை வெளியே எடுத்துள்ளார். அப்போது வீட்டிற்கு அருகில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற பெண்ணின் மீது கார் மோதியது. இதனால் கார் சக்கரத்தில் சிக்கி சரஸ்வதி படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சரஸ்வதியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரஸ்வதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 17 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.