
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெண் தலைவர்களில் ஒருவராக திகழ்பவர் ஜெயலலிதா அம்மையார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொது செயலாளர் ஆக பொறுப்பேற்ற ஜெயலலிதா மிகச் சிறப்பாக கட்சியை வழி நடத்தினார். அவர் 6 முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்வராக இருக்கும்போதே உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நான் நினைவு கூறுகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர் கருணைமிக்க தலைவராகவும் திறமை மிக்க நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாற்றும் வாய்ப்பை நான் பெற்றது என்னுடைய கௌரவம். மேலும் அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன் முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.