
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கருவாடு மீன் ஆகாது, கறந்த பால் மடி புகாது. நயவஞ்சகம் வெற்றி பெறாது. கூடி வாழ்தல் கேடு செய்யாதிருத்தல் உழைத்துப் பிழைத்தல் ஆகியவைகள் தான் மனித குலத்தின் பண்புகள் என்று அண்ணா கூறியுள்ளார். இவைகள் தான் மனிதனை விலங்கினத்தில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்ட குறிப்பிடத்தக்க பண்புகளை நான் இன்று வரை பின்பற்றுகிறேன். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நான் என்றென்றும் விசுவாசமாக இருப்பேன். அரசியல் வரலாற்றில் எந்த நாட்டின் வரலாற்றிலும் ஒருவரை ஒரு அரியாசனத்தில் அமர வைத்துவிட்டு அதன் பின்னர் உரியவருக்கே அந்த அரியாசனம் திரும்பத் தரப்பட்டதாக வரலாறே கிடையாது.
ஆனால் அந்த வரலாறை மாற்றி அமைத்தவர் ஓ பன்னீர்செல்வம் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்களே என்னை பற்றி கூறியுள்ளார். இபிஎஸ் தலைமையிலான அரசு ஒரு மூழ்கும் கப்பல். இதில் யாரும் ஏற மாட்டார்கள். கட்சி அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்வார்கள். 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை மட்டும் பொறுத்திருங்கள். தமிழ்நாட்டு பூமியை ஆளப்போவது யார் என்பது தெரியும். நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். துரோகம் நிச்சயம் விழும். நயவஞ்சகம் நசுக்கப்படும். மேலும் சுருக்கமாக சொன்னால் கருவாடு மீன் ஆகாது என்று பதிவிட்டுள்ளார்.
கருவாடு மீனாகாது;
கறந்த பால் மடிபுகாது;
நயவஞ்சகம் வெற்றி பெறாது! pic.twitter.com/2gVpCdrAPm— O Panneerselvam (@OfficeOfOPS) February 25, 2025