
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மற்றொரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இந்த இரு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வேகமாக வந்தது தான் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்ட நிலையில் 35 பயணிகள் காயமடைந்தனர். அதன் பிறகு கரூரில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.