உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு வைர வியாபாரி ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டார் 10 லட்ச ரூபாய் பணம், ஒரு சொகுசு கார் கேட்டனர். இதனால் பெண்ணின் தந்தை 50 லட்சம் ரூபாய் பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து மீண்டும் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, எனது தந்தை 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பிற பொருட்களை வரதட்சணையாக கொடுத்தார். ஆனால் எனது கணவர் உறவினர்கள் பேச்சை கேட்டு என்னை அடித்து துன்புறுத்தினார். இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினார். என் மாமியார் 10 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டார். ஆனால் என் தந்தையால் 3 லட்ச ரூபாய் மட்டுமே கொடுக்க முடிந்தது. அதன் பிறகு கணவர் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். எனவே கணவர் உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.