
தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னை மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்டில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, அரசியல் என்றாலே வேற லெவல் தான். அங்கு யார் எதிர்பார்கள் யார் யாரை ஆதரிப்பார்கள் என்பது தெரியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தர எதிரியும் கிடையாது. 2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்போம். புதிய வரலாறு படைப்போம். தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் அனைவரும் நாங்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறுகிறார்கள்.
தமிழக வெற்றி கழகம் என்பது ஏழை எளிய மக்களுக்கான கட்சி. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது. ஏன் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா. இங்கு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் பெரிய அளவில் சாதிக்கிறார்கள். முன்பெல்லாம் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. பதவியில் இருப்பவர்கள் தான் பண்ணையர்களாக மாறிவிட்டார்கள் என்று கூறினார். மேலும் அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் கட்சி தொடங்கிய போது அவர்களுக்கு பின்னால் நின்றவர்கள் இளைஞர்கள் தான் என்றும் அவர்கள் வெற்றி பெற்றதை போன்று 2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக தமிழக வெற்றி கழகமும் வெற்றி பெரும் என்று சூளுரைத்தார்.