தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் 2500 பேர் கலந்து கொண்ட நிலையில் முன்கூட்டியே விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் விழாவில் கலந்து கொள்ள சென்ற தாடி பாலாஜி தன் கையில் பாஸ் வைத்திருந்த போதிலும் அவரை நீண்ட நேரமாக காக்க வைத்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஏற்கனவே தாடி பாலாஜிக்கு கட்சியில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. புதிதாக வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்ட போது தாடி பாலாஜி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவின்போது தாடி பாலாஜி பாஸ் வைத்திருந்தும்  நீண்ட நேரமாக காக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நடிகர் விஜயை தாடி பாலாஜி விழாவின் போது சந்தித்தார். அப்போது தாடி பாலாஜி விஜய்க்கு ஏதோ பரிசு கொடுக்க இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து ஒரு காப்பை விஜய்க்கு பரிசாக வழங்கினார். ஆனால் அந்த காப்பை வாங்குவதற்கு விஜய் மறுத்துவிட்டார். தாடி பாலாஜி அதனை ஆசையாக கொடுத்த நிலையில் விஜய் அதனை வாங்க மறுத்து விட்டதால் அந்த காப்பை அவர்  தன் கையில் போட்டுக் கொண்டார். ஏற்கனவே தாடி பாலாஜிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படாதது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் தற்போது அவர் ஆசையாக கொடுத்த பரிசை விஜய் வாங்க மறுத்தது பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.